தமிழ் இணைய எழுத்துருக்கள் – ஒரு விளக்கம்

Hi everyone!

This is going to be my first tamil post. I am writing this in tamil because, this post is mainly some information for tamil website developers and designers who are upset about the tamil unicode font which is available in the internet. But, if you’re interested in knowing about it and didn’t understand what is going to follow, please feel free to ask for a translation. I am a bit lazy to translate it to English now. But, we can work it out. Cheers.


வணக்கம் நண்பர்களே! இந்த பதிவானது தமிழ்ப்பதிவர்களுக்கும் இணைய ஆர்வலர்களுக்கும் உதவியாக இருக்கும் என நம்புகின்றேன். சில மாதங்களுக்கு முன்னர் – நான் இந்த வலைத்தளத்தை ஆரம்பித்த காலங்களில் தமிழ் இணைய எழுத்துருக்கள் பற்றிய தேடல் ஒன்றை மேற்கொண்டேன். காரணம் அனைவரும் அறிந்ததே! இணையத்தில் பலவாறான ஆங்கில இணைய எழுத்துருக்கள் காணப்படுகின்றன. ஆனால், இவ்வசதி தமிழுக்கு இருக்கவில்லை. மன்னிக்கவும். இருந்திருக்கவில்லை.

நான் எனது தேடலை மேற்கொண்ட போது, ஒரு இணையத்தளம் என் கண்ணில் பட்டது. அதில் ஒரு பதிவு, தமிழ் இணைய எழுத்துருக்கள் பற்றிய விரிவான விளக்கத்தை உதாரணம் மூலம் காட்டியிருந்தது. அப்பதிவில் அந்த எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்டும் காணப்பட்டது. அதன் அழகும் அதைப் பார்த்ததும் வந்த ஆனந்தமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. அப்பதிவு 2013ஆம் ஆண்டே எழுதப்பட்டிருந்தது. நண்பர் தாரிக் அஸீஸ் அப்பதிவினை எழுதி இருந்தார். மிகச்சீரான அந்தப்பதிவு இதோ:- தமிழ் எழுத்துக்களுக்கு அழகு சேர்த்தல்.

நான் இதை மீள்பதிவு செய்யாமல் வெறுமனே அப்பதிவை மட்டுமே தந்திருக்கலாம். ஆனால், அப்பதிவானது பல பதிவர்களுக்கு பாவனைக்கு உதவியாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே! காரணம் பதிவர்கள் அனைவரும் வலை உருவாக்குனர்கள்*(web developers) அல்ல. அதுமட்டுமன்றி, இவ்வாறான பதிவுகள் மக்களை சென்றடைவதே சிறப்பு என்பதால், அதனை சற்று விளக்கமாக எழுதலாம் என முடிவெடுத்தேன்.

Google இன் early access செயற்பாட்டில் மொத்தமாக 6 தமிழ் எழுத்துருக்கள் காணப்படுகின்றன. அவற்றை எவ்வாறு உங்கள் இணையத்தளத்திலோ பதிவுத்தளத்திலோ உள்ளடக்குவது என்பதை இங்கே விளக்குகின்றேன்.

Droid sans tamil

Droid sans tamil

இதனை உள்ளடக்க, உங்கள் ஸ்டயில்ஷீட்டில் அனைத்து ஸ்டைல்களுக்கும் முதல், கீழ்க்காணும் code இனை சேர்க்க வேண்டும்.

@import url(http://fonts.googleapis.com/earlyaccess/droidsanstamil.css);

.tamil
{
 font-family: Droid Sans Tamil, serif;
}

Karla tamil inclined

karla tamil inclined

இதனை உள்ளடக்க, உங்கள் ஸ்டயில்ஷீட்டில் அனைத்து ஸ்டைல்களுக்கும் முதல், கீழ்க்காணும் code இனை சேர்க்க வேண்டும்.

@import url(http://fonts.googleapis.com/earlyaccess/karlatamilinclined.css);

.tamil
{
  font-family: Karla Tamil Inclined, serif;
}

Karla tamil upright

karla tamil upright

இதனை உள்ளடக்க, உங்கள் ஸ்டயில்ஷீட்டில் அனைத்து ஸ்டைல்களுக்கும் முதல், கீழ்க்காணும் code இனை சேர்க்க வேண்டும்.

@import url(http://fonts.googleapis.com/earlyaccess/karlatamilupright.css);

.tamil
{
  font-family: Karla Tamil Upright, serif;
}

Lohit tamil

lohit tamil

இதனை உள்ளடக்க, உங்கள் ஸ்டயில்ஷீட்டில் அனைத்து ஸ்டைல்களுக்கும் முதல், கீழ்க்காணும் code இனை சேர்க்க வேண்டும்.

@import url(http://fonts.googleapis.com/earlyaccess/lohittamil.css);

.tamil
{
  font-family: Lohit Tamil, serif;
}

Noto sans tamil UI

Noto sans tamil UI

இதனை உள்ளடக்க, உங்கள் ஸ்டயில்ஷீட்டில் அனைத்து ஸ்டைல்களுக்கும் முதல், கீழ்க்காணும் code இனை சேர்க்க வேண்டும்.

@import url(http://fonts.googleapis.com/earlyaccess/notosanstamilui.css);

.tamil
{
  font-family: Noto Sans Tamil UI, serif;
}

Noto sans tamil

Noto sans tamil

இதனை உள்ளடக்க, உங்கள் ஸ்டயில்ஷீட்டில் அனைத்து ஸ்டைல்களுக்கும் முதல், கீழ்க்காணும் code இனை சேர்க்க வேண்டும்.

@import url(http://fonts.googleapis.com/earlyaccess/notosanstamil.css);

.tamil
{
  font-family: Noto Sans Tamil, serif;
}

இவ்வாறு உங்களுக்கு பிடித்த எழுத்துருவினை இணைத்துக்கொண்ட பிறகு, உங்கள் பதிவினை எழுதும் போது நீங்கள் தமிழை உபயோகிக்கும் இடங்களில் அந்த வசனங்களை கீழ்க்கண்டவாறு span element இனால் wrap பண்ணி அதற்கு tamil எனும் class இனை வழங்கினால் போதும், உங்கள் விருப்பத்துக்குரிய தமிழ் எழுத்துருவானது அந்த வசனத்தை அலங்கரிக்கும்.

tamil

* மொழிபெயர்ப்பு உதவி – முல்லை கோகுலன்

நன்றி
தாரிக் அஸீஸ் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.