கலையை ரசிக்கும் எந்தவொரு ரசிகனும் “நான் இன்னாரின் ரசிகன்” என்று தன் வட்டத்தினை குறுக்கிக்கொள்வதில்லை. தன் வட்டத்தினை குறுக்கிக்கொள்ளும் எவனும் கலையின் ரசிகனில்லை.
சமீபத்தில்தான் The Godfather எனும் திரைப்படத்தினை காண நேர்ந்தது. பார்த்த அனைவருக்குமே தெரிந்திருக்கும் நாயகன் திரைப்படம் அதன் தழுவல்தான் என்பது…
இது பரவாயில்லை. தழுவல்தானேயொழிய கதையில் கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது. ஆனால், நாயகன் கமலின் பாவனைகளும் (manerisms), godfather திரைப்படத்தில் வரும் நடிகர் Marlon Brando மற்றும் Al Pacino வினுடைய பாவனைகளை ஒத்ததாகவே காணப்பட்டது கொஞ்சம் வருத்தத்தை தந்தது. ஆகவே அதைப்பற்றி மேற்கொண்ட தேடலின் போது…..
வேலுநாயக்கர் கதாபாத்திரம் The Godfatehr கதாபாத்திரங்களை தழுவக்கூடாது என்பதற்காக கவனமாக செயற்பட்டாலும் அதன் தழுவலை தவிர்க்கமுடியவில்லை என கமல்ஹாசன் கூறியிருந்தார். மேலும், அவர் எழுதிய தேவர் மகன் என்ற திரைப்படமே The Godfather இன் கதையின் தழுவல் என்பதையும் கூறியுள்ளார். அதுவும் சரிதான். தேவர் மகனில் கதை. நாயகனில் சில இடங்களில் கதை, சில இடங்களில் பாவனை. சில இடங்களில் camera angle மற்றும் lighting என The Godfatehr தொட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆயினும், நாயகன் திரைப்படம் எந்த திரைப்படத்தையும் தழுவியதல்ல என மணிரத்ணம் சாதித்து வந்தது என்னமோ வேறு விடயம்.
மிகச்சிறப்பான கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட திரைப்படங்களாலேயே இவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்த முடியும்.
சில அவதானிப்புக்கள்!